பொது நுழைவுத்தேர்வு உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளதாக அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கவுகாத்தி :
நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு மே 1-ந் தேதியும், ஜூலை 24-ந் தேதியும் 2 கட்டங்களாக என்.இ.இ.டி. எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பல மாநில அரசுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இது குறித்து அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவால் அசாம் மாநில மாணவ-மாணவிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக அசாம் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சரியான தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment