கல்வித்துறை நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில்,புதிய வழிமுறைகளை அதிகம் புகுத்த வேண்டும்,என,கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்களின் தலைமைப்பண்பு, கற்பிக்கும் முறை,எளிமையான முறையில் கற்பித்தல்,ஆங்கில வழியில் கற்பித்தல்,ஆய்வுப்பாடம் மற்றும் கணித உபகரணப் பெட்டிகள் குறித்து,ஆண்டுதோறும், கல்வித்துறை சார்பில்,ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இடைநிலை கல்வி இயக்கத்தின் கீழ்,பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்கள் அப்பயிற்சியை வழங்குகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள்,பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்கின்றன.இதில் நடப்பு கல்வியாண்டில்,பயிற்சிக்கு மட்டுமே பெரும்பான்மையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகளுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் வசதி மேம்படுத்துதல் உள்ளிட்டவை தடைபட்டன.தொடர் பயிற்சிகளால் பாதிப்பு தவிர,தொடர் பயிற்சிகளால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்,மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பாதிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்வித்திறன் முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவில்லை;சில பயிற்சிகளில் மற்ற பள்ளிஆசிரியர்களே பயிற்சியளிப்பதால் அதில் பயனில்லை என சில பள்ளி தலைமையாசிரியர்களே கூறுகின்றனர்.
இதற்கு பயிற்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்,ஒரே முறையை பின்பற்றி பயிற்சியளிப்பதே காரணமாக உள்ளது.பயிற்சிகளின் நோக்கமே மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவது. தற்போது அதன் நிலை மாறி,தொடர் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்விக்கே பாதிப்பு ஏற்படும் நிலையே உள்ளது.உடுமலை,சுற்றுப்பகுதியில்,நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பயிற்சிகள் பாடவாரியாகவே நடத்தப்படுகிறது. இருப்பினும்,மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு அதன் கருத்துகளை கொண்டு செல்வது என்பது குறித்து பயிற்சியளிப்பதில் புதிய முறைகளை புகுத்த வேண்டும் என,எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு முக்கியத்துவம் அளித்து,இதற்கு மட்டுமே அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் பயனின்றி உள்ளது. இதனால்அரசின் நிதி ஒதுக்கீடு வீணடிக்கப்படுவதாகவும் பெற்றோர் புகார் கூறுகின்றனர். அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்கம் இதனை ஆய்வு செய்து,புதிய வழிமுறைகளை பயிற்சியில் புகுத்த வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment