மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் பதிவிறக்கம் செய்ய...
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்களை அரசாணை 177ன்படி SSAமூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளான கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்புலமை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட மார்ச் 2012ல் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது. பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணை 177 தமிழில் வழங்கப்படாததால் மே மாதம் ஊதியம், ஒரு ஆசிரியர் 4 பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு போன்ற பணி சார்ந்த பிரச்சனைகள் இதுவரை தீர்வு காணமுடியவில்லை.

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள்
1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 16549 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
2) பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர்களை தமிழகம் முழுவதும் கணக்கெடுத்து அனைவரின் குடும்பங்களுக்கும் அரசின் அனைத்து உதவிகளை உடனடியாக செய்து, அவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு பணி நியமனம் வழங்கி, நிச்சயம் மாண்புமிகு அம்மா அவர்கள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு புதிதாக அரசாணை வெளியிட்டு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
3) நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளி என்றில்லாமல் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை போதித்திடும் வகையில் தற்போது பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களே தொடர்ந்து பணிபுரிந்தால் மாணவர்கள் மென்மேலும் ஊக்கமும், உற்சாகமும் நிச்சயம் அடைவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பணி நிரவலை கைவிட்டு பொது மாறுதல் நடத்தி அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
4) தற்போது நடைபெற்ற 3.11.15(ஓவியம்), 4.11.15(உடற்கல்வி), 5.11.15(தொழிற்கல்வி) பணிநிரவலால் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகமானோர் சுமார் 100கி.மீ முதல் 250கி.மீ வரை நெடுந்தூரம் பயணித்து பள்ளி சென்று பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரூ.7000/- குறைவான தொகுப்பூதியத்தில் நிதிநெருக்கடியில் குடும்பங்களை நடத்திடும் சிரமமான சூழலில் பள்ளிக்கு செல்லும் பேருந்து செலவினையும், அலைச்சலால் ஏற்படும் உடல்நலக்குறைவுகளையும், எதிர்பாராத விபத்து உள்ளிட்ட பிரச்சனைகளையும் தவிர்த்திட உதவிடும் வகையில் பணிநிரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பினை வழங்கி உதவிட வேண்டும். பணிநிரவலால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானவர்களை அடையாளம் காணும் வகையில் உடனடியாக தமிழகம் முழுவதும் பட்டியலை பெற்று மறு மாறுதல் நடத்திட வேண்டுகிறோம்.
5) பணியமர்த்தப்பட்ட மார்ச் 2012முதல் இதுவரை மே-2012, மே-2013, மே-2014, மே-2015 ஆகிய 4 மாதங்களின் ஊதியம் வழங்கப்படாததால் அதனை கணக்கிட்டு அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தங்களின் உயரிய கொள்கையை போற்றும், மாண்புமிகு அம்மா அவர்களை நம்பி வாழும் 16549 குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு உயிரூட்டி வாழ்வளித்திட வேண்டுகிறோம். என் போன்ற ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியரின் கோரிக்கைகளும் இது ஒன்றே தான். தங்களின் பொற்பாதங்களை தொட்டு வேண்டி சி.செந்தில்குமார், பகுதிநேர கணினி ஆசிரியர்,9487257203, கடலூர் மாவட்டம்.
No comments:
Post a Comment