விமான போக்குவரத்து பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த, ஏர் -இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஏர் - இந்தியா நிறுவனத்தின் விமானிகள், விமான இன்ஜினியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி மையம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தலைநகராக விளங்கும் ஐதராபாத்தில் உள்ளது.
இந்த மையத்தில் சில அடிப்படை மாற்றங்களை மேற்கொண்டு, விமான போக்குவரத்து பல்கலைக்கழகமாக மாற்றி, விமான போக்கு வரத்து தொடர்பான, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை வழங்க, ஏர் - இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான வாய்ப்புகளை ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி, பல்கலைக்கழகத்தை துவக்கலாம் என, பரிந்துரை செய்துள்ளதை அடுத்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக, ஏர் – இந்தியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, நாட்டின் முதல் விமான போக்குவரத்து கல்வி நிறுவனம், உ.பி.,யின் அமேதி நகருக்கு அருகே, ராஜிவ் தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் என்ற பெயரில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.அமேதி லோக்சபா தொகுதியின், எம்.பி.,யாக இருப்பவர், காங்., துணைத் தலைவர் ராகுல்.
No comments:
Post a Comment