ஏழாவது ஊதிய குழு தயாரித்துள்ள அறிக்கை, நாளை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் படி, ஆறாவது ஊதிய குழுவின் அறிக்கை, 2006, ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது. ஏழாவது ஊதிய குழு, முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசால், 2014ல் அமைக்கப்பட்டது. இந்த குழு, தன் அறிக்கையை, இந்தாண்டு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
ஒரு சில காரணங்களால், ஊதிய குழுவுக்கு, டிசம்பர் வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டது. இந்நிலையில், ஊதிய குழுவின் தலைவர், நீதிபதி, ஏ.கே.மாத்துார் கூறுகையில், ''ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, வரும் 19ல், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
இந்த குழுவின் அறிக்கையால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், 55 லட்சம் பேரின் ஓய்வூதியமும் மாற்றி அமைக்கப்படும்.
இதே அறிக்கையில், ஒரு சில மாற்றங்கள் செய்து, மாநில அரசுகளும், தங்கள் ஊழியர்களுக்கான சம்பளங்களை மாற்றி அமைக்கும்.
No comments:
Post a Comment