Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 4, 2016

    பொதுமாறுதல் கலந்தாய்வு: தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

    பொது மாறுதல் கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போல நடத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 


    இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் கே.அனந்தராமன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

    தமிழகத்தில் ஆக. 6 ஆம் தேதி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.  இதில் கடந்த ஆண்டு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்கள் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிநிரவல் முறையில் இடமாறுதலுக்கு உள்ளான தலைமை ஆசிரியர்களும், கலந்தாய்வில் பங்கேற்க இயலாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே கடந்த ஆண்டைப் போல பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு பதவி உயர்வில் சென்ற தலைமை ஆசிரியர்களையும், பணிநிரவலில் இடமாறுதல் செய்யப்பட்டவர்களையும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

    No comments: