சிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதியை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் அருகே கல்வன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் பாரதிதாசன். இவர் சில தினங்களுக்கு முன் நடந்த பணிநிரவல் கவுன்சிலிங்கில் சிவகங்கை அருகே தமறாக்கி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதை கண்டித்து நேற்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் குமரேசன், மாநிலத் துணைத் தலைவர் மோசஸ், செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் அதிகாரியை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பாண்டி கூறியதாவது: பணிநிரவலில் 40 சதவீதம் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யக்கூடாது என, இயக்குனர் செயல்முறை ஆணை உள்ளது. ஆனால் உள்நோக்கத்தோடு ஆசிரியரை இடமாறுதல் செய்துள்ளனர். அதை திரும்ப பெற வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment