இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என, அண்ணா பல்கலைக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இன்ஜி., கல்லுாரிகளையும் அதற்கான பல்கலைகளையும், ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு கட்டுப்படுத்துகிறது. பல இன்ஜி., கல்லுாரிகள், அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்களின் சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் இந்த அமைப்புக்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில், இன்ஜி., கல்லுாரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கும் அண்ணா பல்கலை உள்ளிட்ட அனைத்து பல்கலைகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில், இன்ஜி., கல்லுாரி மாணவர்களின் புகார்கள் மற்றும் பிரச்னைகளை தீர்க்க, சம்பந்தப்பட்ட பல்கலைகள், ஆம்புட்ஸ் மேன் எனப்படும், குறைதீர் அதிகாரியை உடனே நியமிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் அதன் விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறைதீர்வு அதிகாரியின் பெயர், அலுவலக விபரங்களை, தங்கள் பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளின் அறிவிப்பு பலகைகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment