தமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிவித்ததாவது,
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பரிசுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment