மும்பையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், சி.சி.டி.வி., எனப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்குள்ள, மும்பை மாநகராட்சியும், சிவசேனா - பா.ஜ., கூட்டணி வசம் உள்ளது. சிவசேனாவைச் சேர்ந்த ஸ்நேகல் ஆம்பேகர் மேயராகவும், பா.ஜ.,வைச் சேர்ந்த அல்கா கேர்கர், துணை மேயராகவும் உள்ளனர்.
மும்பை மாநகராட்சி பள்ளிகளில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மும்பை மாநகராட்சி பள்ளிகளில், யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment