அரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகளின் விளையாட்டுத்திறனுக்கும், கல்வித்துறை முக்கியத்துவம் அளித்து போட்டிகள் நடத்த வேண்டும் என்பதை, செயல்திட்ட படைப்பின் மூலம் வெளிப்படுத்த, முன்வந்துள்ளது கோட்டமங்கலம் நடுநிலைப்பள்ளி.
ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு பள்ளி குழந்தைகளின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் விதமாக தன்னார்வ அமைப்பு மூலம் டிசைன் பார் சேன்ஞ் என்ற போட்டியை தேசிய அளவில் நடக்கிறது.
இதில் சமூக பிரச்னை அல்லது மாணவர்களை சுற்றி நடக்கும் பிரச்னைகளில், ஏதேனும் ஒன்றுக்கு பள்ளிக்குழந்தைகள் மூலம் தீர்வு காணும் வகையிலான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும். சிறப்பாக உள்ள திட்டங்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
போட்டியில், மாநில அளவில், நுாறு பள்ளிகள் தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய், தேசிய அளவில் ஐந்து பள்ளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், செயல் திட்ட வழிக்கற்றலின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பயிற்சியளிக்கப்படுகிறது.இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் மேம்படுவதோடு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிந்தனையும் மேலோங்குகிறது.
உடுமலையில், எட்டு பள்ளிகள், குடிமங்கலத்தில் ஆறு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள், பல்வேறு பிரச்னைகளை கையில் எடுத்துள்ளனர்.
இப்போட்டியில், கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தேர்வாகியுள்ளது. இங்கு, நடுநிலைப்பள்ளி குழந்தைகள் விளையாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் புறக்கணிக்கப்படுவதை தேர்ந்தெடுத்துள்ளனர்.
கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் குறுமையப் போட்டிகளிலும் கூட இக்குழந்தைகள் பங்கேற்க வாய்ப்பில்லை. கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க முக்கியத்துவம் வழங்கும் கல்வித்துறை, இக்குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே இப்பள்ளி செய்து வரும் செயல்திட்டத்தின் கருப்பொருள்.
நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சியே இல்லாமல் இருப்பதால், திறன் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் முடக்கப்படுகின்றனர்.
இம்மாணவர்கள் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி செல்லும் பட்சத்தில், சீனியர் பிரிவில் விளையாடுவதற்கான வாய்ப்பே இவர்களுக்கு கிடைக்கும்.
அடிப்படையே தெரியாமல் எட்டாம் வகுப்பு வரை முடித்து வரும் மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் விளையாட்டு பயிற்சியில் சேர முன்வருவதில்லை.
எனினும், ஒருசில குழந்தைகள் ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள முன்வந்தாலும், அடிப்படையை கற்றுக்கொள்வதற்குள்ளேயே பத்தாம் வகுப்பு வந்துவிடும். இதனால் அடிப்படை வகுப்பு முதலே, குழந்தைகளின் விளையாட்டுத்திறனையும் மேம்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தினரின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
இப்பள்ளி அதை வெளிப்படுத்தும் விதமாக செயல்திட்டத்தை தேர்ந்தெடுத்து, படைப்பாக வெளிப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment