புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது.150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு 4ம் வகுப்புக்கு பாடமெடுக்கும் ஜெயசந்திரன் என்பவர், பாடம் சொல்லித்தராமல் மொபைல் போனில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உபயோகபடுத்துவதாக மாணவர்கள் புகார் கூறினர். இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் தலைமையாசிரியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
ஆனால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் கொட்டகை அமைத்து அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையறிந்த டி.எஸ்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் உறுதியாக கூறினர். இதனையடுத்து ஜெயச்சந்திரன் மற்றும் தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment