அரசு பள்ளி மாணவர்களின் எழுத்து, வாசிப்பு, உள்வாங்கும் திறனை மேம்படுத்த, இரண்டாம் கட்ட திறனாக்க தேர்வு, பள்ளிகளில் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமச்சீர் கல்வி திட்டம் அமலான பின், எட்டாம் வகுப்பு வரை, ஆல் பாஸ் செய்யப்படுகிறது. இவர்களுக்கு, பருவத்தேர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால், கற்றலில் மாணவர்கள் பின்தங்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த இடைவெளியை நிரப்ப, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எழுத்து, வாசிப்பு, சிந்தித்தல் திறனை வளர்க்க, திறனாக்க தேர்வுகள் நடத்தப்படுகிறது.
பள்ளி துவங்கியதும், காலாண்டு தேர்வுக்குள், இரு கட்ட மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய, மூன்று பாடங்களில் மட்டும், வகுப்புக்கு ஏற்ப, எழுத்து, வாசிப்பு தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த முடிவுகள் ஆய்வு செய்து, ஒவ்வொரு மாணவருக்கும், பிரத்யேக தரப்பட்டியல் உருவாக்கப்படும். பின், பிப்ரவரி, மார்ச் மாதங்களில், மூன்று, நான்காம் கட்ட தேர்வுகள் நடத்தி, திறனை வளர்க்க உதவி செய்யப்படும்.
முதல், இரண்டாம் நிலை தேர்வுகளில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அடுத்தடுத்த தேர்வுகளில், பெறும் மதிப்பெண்கள் கொண்டு, மாணவர்களின் தரத்தை அறிந்து கொள்ளலாம். பின்தங்கிய மாணவர்களை, எட்டாம் வகுப்புக்குள், முன்னிலை பெற செய்வதே, தேர்வின் நோக்கம்.
எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) அருள் முருகன் கூறுகையில், மாணவர்களின் திறன் அறிந்து, கற்றல், கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டுவர திறனாக்க தேர்வுகள் நடக்கிறது. இதில், வகுப்பு வாரியாக, எழுத்து, வாசிப்பு, உள்வாங்குதல் திறன் குறித்த கேள்விகள் இடம்பெறும்.
சிறிய கணக்குகளில் தடுமாறும் மாணவர்களால், அடுத்தடுத்த வகுப்புகளில், தேர்ச்சி பெற்றாலும், கற்றலில் பின்தங்கிய நிலையே ஏற்படும். இதை தடுக்க, சிறப்பாக கற்கும் மாணவர்களை ஊக்குவித்தும், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment