பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது.



மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள், செப்., 2ல், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு,குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது. தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து, வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை, அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபரிசீலனை செய்யும்படி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து ஆராய, நிதியமைச்சர் அருண் ஜெட்லிதலைமையில்,
அமைச்சகங்கள் இடையிலான குழு, கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.