இன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.
அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, அக்., 22ல் எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முன்தினம் முதல், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன; வரும், 7ம் தேதி வரை, விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு ஏற்கனவே, 2014ம் ஆண்டு முதல் அறிவிப்பு வெளியானது; அப்போதும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்; அவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2014 விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்த பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
No comments:
Post a Comment