“தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் செயல்முறை கல்வி மூலம் பள்ளிகளுக்கு ' கிரேடு' வழங்கும் திட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறோம், என, சிவகங்கையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஏ.ஜோசப் சேவியர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் செயல்முறை கல்வி என்ற பெயரில் பள்ளிக்கு 'கிரேடு' வழங்கி, ஆசிரியர்கள் மனதை புண்படுத்துகின்றனர். இந்த முறையில் பல குறைபாடு உள்ளது,என அரசுக்கு வலியுறுத்தினோம். அதற்கு பின் இத்திட்டம் செயல்படவில்லை.
தற்போது அட்டைக்கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இத்திட்டம் ஆந்திர மாநிலம், ரிஷிவேலி என்ற மலைப்பகுதி மாணவர்களுக்காக அறிமுகம் ஆனது.
தமிழகத்தில் ஆசிரியர், மாணவர்கள் பள்ளி புத்தகங்களை கையாளுவதா, அட்டையை கையாளுவதா என தெரியாமல் இருந்தனர். பலகட்ட போராட்டத்திற்கு பின் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை வந்தது. அதற்கு பின் செயல்வழிகற்றல் திட்டம் மீண்டும் துவங்கியதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பள்ளிகள் கண்காணிப்பு: அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்களின் சந்தேகத்தை தீர்க்கும் நிலையில் இருந்து மாறி, அரசுக்கு புள்ளிவிபரம் தருதல், ஆசிரியர், மாணவர் தரத்தை சோதிக்கும் அதிகாரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இவற்றை கண்காணிக்க தான் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளனர்.
அனைவருக்கும் கல்விதிட்டம் சார்பில் வழங்கும் பயிற்சியை ஆண்டுக்கு 20 நாட்கள் மட்டுமே வழங்கவேண்டும். ஆனால், தொடர்ச்சியாக பல பயிற்சி தருகின்றனர். ஓராசிரியர், ஈராசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகளில் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, வகுப்பு பாதிக்காதவாறு, ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து, கல்வியை வளர்க்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment