காரைக்குடி:'நீர் இல்லாது போகும் வரலாறு என்ற ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க, தினமலர் நாளிதழில் வெளிவந்த கட்டுரை உறுதுணையாக இருந்தது' என ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவிகள் பெருமிதத்துடன் கூறினர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., பள்ளியில் நடந்த மாவட்ட அறிவியல் மாநாட்டில், 37 பள்ளிமாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் திருப்புத்துார் அருகே மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி கிருபாஷினி தலைமையில் 'நீர் இல்லாது போகும் வரலாறு' என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.
மாணவி கூறியதாவது:மாங்குடி கிராமத்தில் வகுப்பு ஆசிரியை அன்சர்பானு உறுதுணையுடன், மாணவர்கள் சந்தோஷ், கிருத்திகா, பாண்டிசெல்வி, ரஞ்சித் 40 நாட்கள் களஆய்வு மேற்கொண்டோம்.
எங்கள் கிராமத்தில் 1991ல் 98 குடியிருப்பு இருந்தது. இணைந்து குளம் வெட்டி, ஆதாரமாக மழைநீரை சேகரித்தனர். தற்போது 135 குடியிருப்பு இருந்தும், புதிய குளங்கள் வெட்டப்படவில்லை. வெட்டிய குளமும் விளையாட்டு திடலாக உள்ளது. 80 குடும்பத்தினர் விவசாயம் செய்தனர்; தற்போது 25 குடும்பத்தினர் தான் விவசாயம் பார்க்கின்றனர். விளைநிலங்கள், மனைகளாக மாற்றப்பட்டு, மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் மழை குறைந்துள்ளது.
நிலத்தடி நீர்:மழைநீர் வீணாகாமல் இருக்க மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் 45 வீடுகளில் மட்டுமே இது உள்ளது.இந்த கட்டுரை சமர்ப்பிப்பதற்குதினமலர் நாளிதழில் வெளி வந்த 'வனநாள் காப்போம்', 'சரஸ்வதி நதி எங்கே போனது' மற்றும் 'குளங்கள்' குறித்த 'என் பார்வை' கட்டுரைகள் உதவின, என்றார்.தலைமை ஆசிரியை மார்கிரெட் சாந்தகுமாரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment