வருமான வரி தாக்கல் விவரங்கள் மற்றும் அது தொடர்பான ரகசிய எண்கள், குறிப்புகளை, மொபைல் போன் அல்லது இ - மெயில் வாயிலாக மோசடியாளர்கள் கேட்க வாய்ப்பு உள்ளது; அந்த தகவல்களை, யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம்' என, வரி செலுத்துவோரை, வருமான வரித்துறை உஷார்படுத்தியுள்ளது.கடந்த ஓரிரு ஆண்டுகளாக, இணையம் வாயிலாகவே, பெரும்பாலான வருமான வரி தாக்கல் மற்றும் வரி செலுத்துவது நடைபெறுகிறது.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி நபர்கள், வருமான வரி செலுத்துவோரின் தகவல்களை திருடி, முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக, வருமான வரித்துறை சந்தேகம் கொண்டுஉள்ளது. அதையடுத்தே, எச்சரிக்கை அறிவிப்பை, அந்த துறை வெளியிட்டுள்ளது. அதில், 'வருமான வரித்துறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடையும் நிலையில் உள்ளதால், வரி செலுத்துவோர், தங்களின் சொத்து, வங்கி எண், கடன் அட்டையின் ரகசிய குறியீடு எண்கள் போன்றவற்றை யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம்' என, கேட்டுக் கொண்டுஉள்ளது.
No comments:
Post a Comment