தொடர் மழை காரணமாக சென்னையிலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் சிறிய அளவில் மழை பதிவாகி வந்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
மழை தொடர வாய்ப்பு உள்ள காரணத்தால், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது. இதுபோல கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment