தமிழகத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாகப் பணியமர்த்த வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் சங்க கூட்டுக்குழு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணை நிலை எண் 177-இன் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக தொடர்ந்து மூன்றரை ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களது மாத வருமானம் ஒட்டுமொத்த தொகுப்பூதியம் ரூ. 7,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருமானத்தைக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என கூட்டுக்குழு சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment