சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற டைம்ஸ் உயர்கல்வி இதழ் சார்பில் சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் எதுவும் இதுவரை முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றதில்லை.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை டைம்ஸ் உயர்கல்வி இதழ் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முதல் 100 இடங்களில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்(IISc) 99-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்போர்ட், கால்டெக், மஸாச்சுசெட்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்கள் தக்க வைத்துள்ளன.
No comments:
Post a Comment