இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு என வகைபடுத்தப்பட்டுள்ள, ஓ.பி.சி., மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 30 ஆயிரம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த, உ.பி., அரசு திட்டமிட்டுள்ளது.
உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி உள்ளது. இம்மாநிலத்தில், ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் ஓட்டு, 52 சதவீதம் உள்ளது. ஓ.பி.சி., மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெற, அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், 30 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என உள்ளது.
வரும், 2017ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள இந்த மாநிலத்தில், ஓ.பி.சி., பிரிவினரின் ஓட்டுகளை குறிவைத்து, அந்தப் பிரிவு மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான உச்ச வரம்பை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, மாநில சமூக நலத்துறை, நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
No comments:
Post a Comment