தேசிய மாணவர் ஹாக்கி போட்டியில் விளையாட தமிழக பள்ளி அணி தகுதி பெற்றது.இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய மாணவர் ஹாக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நவ., 15 முதல் 20 வரை நடக்கிறது. இதில் 17 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் விளையாட தமிழக பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது.
அணி வீரர்களாக எட்வின் சாமுவேல் (அரசு மேல்நிலைப்பள்ளி, தஞ்சை), ஜெயபிரகாஷ் (அரசு மேல்நிலைப்பள்ளி, உத்திரகோசமங்கை), சக்திவேல் (செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்), நவீன்குமார் (சங்கர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ), அஜித்பாண்டியன் (எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை ), கீர்த்திவாசன் (புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சை), தினேஷ் மில்க் (புனித அன்னை மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்) ஹரீஷ்(இந்திரா காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி, மதுரை), சிவசுப்ரமணியன் (மான்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, அரியலுார்), தேவஅருள் (புனித ஜோன்ஸ் மேல்நிலைப்பள்ளி,நெல்லை ) பாலமுருகன் (புனித ஜோன்ஸ் மேல்நிலைப்பள்ளி, நெல்லை ), அருண் (அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதுரை), அஜித்குமார் (அரசு சுகர்ஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை),
நந்தகிருஷ்ணன் (ஹாஜாமீன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி), அழகுமுத்து(புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை), கார்த்திக் (ஒய்.எம்.சி.ஏ. கல்லுாரி விளையாட்டு விடுதி, சென்னை) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் இன்று முதல் ஒரு வார பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத், அணி மேலாளர் ரமேஷ், பயிற்சியாளர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களுடன் நவ., 11ல் பஞ்சாப் செல்கின்றனர்.
No comments:
Post a Comment