அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சி வழங்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், கற்றல், கற்பித்தலை எளிதாக்கும் வகையிலும், ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு திறம்படக் கொண்டு செல்லும் நோக்கத்திலும், இணையத்தைப் பயன்படுத்தி கற்பித்தலை எளிமையாக்கவும், இணையத்தில் தமிழ் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழங்கப்பட்ட இந்த பயிற்சி முகாம், நல்லானூர் ஜெயம் கல்லூரியில் அக்.28-ஆம் தேதி தொடங்கி அக்.30 வரை மூன்று நாள்கள் நடைபெற்றன.
தொடக்க விழாவுக்கு, தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் த.சீனிவாசன் தலைமை வகித்தார்.
ஜெயம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவிப் பேராசிரியர் ஆசிர் ஜுலியஸ் முகாமை பார்வையிட்டார். இதில், 50 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.
கல்லூரி இயக்குநர் அனந்தராமன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ச.செந்தில்குமார், கருத்தாளர்கள் நீதிதாஸ், ராஜேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment