மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாடு மற்றும் பாலியல் பிரச்னைகளை தீர்க்க, கமிட்டி அமைக்காத கல்லுாரிகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவ, மாணவியர் இடையே, பாலின ரீதியான வேறுபாடுகளை போக்கவும், பாலியல் பிரச்னைகளை தீர்க்கவும், தனி கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்; புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என, இரு மாதங்களுக்கு முன், யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது.
இதுவரை, தமிழகம் உட்பட பெரும்பாலான மாநில கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கமிட்டிகள் அமைக்கவில்லை. கல்லுாரி வளாகங்களில், பாலியல் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க, பதிவேடுகளும் வைக்கப்படவில்லை; விசாரணை அதிகாரியும் நியமிக்கவில்லை. இது தொடர்பாக, யு.ஜி.சி.,க்கு புகார் சென்றதை அடுத்து, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, கமிட்டி அமைக்கப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment