“மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் 2006-க்கு பிறகு, 1.1.2016 முதல் புதிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அமுலுக்கு வருகின்றன.”
திரு.மாத்தூர் தலைமையிலான 7வது ஊதிய குழு தனது 900 பக்க அறிக்கையினை இன்று மத்திய நிதி அமைச்சரிடம் சமர்பிக்க உள்ளது.
7வது ஊதிய குழு குறித்த ஒரு பார்வை…
*25.9.2013 அன்று அன்றைய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் 7வது ஊதிய குழு அமைப்பது குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பாக்கினார்.
*4.2.2014 அன்று அன்றைய பிரதமந்திரி மன்மோகன் சிங்க் 7வது ஊதிய குழு அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கினார்.
*திரு.மாத்தூர் தலைமையில் (1.Justice Shri Ashok Kumar Mathur, Chairman, 2.Shri Vivek Rae, Member, 3.Dr. Rathin Roy, Member, 4.Smt. Meena Agarwal, Secretary) 4 நபர்கள் கொண்ட 7வது ஊதிய குழு அமைக்கப்பட்டது.
*28.2.2014 அன்று காபினெட் ஒப்புதல் பெறப்பட்டு 7வது ஊதிய குழுவிற்கான ‘Terms of Reference’ வழங்கப்பட்டது.
*18 மாத கால அவகாசத்துடன் தொடங்கிய குழு விரைவாக செயல்பட்டு குறித்த காலத்தில் தனது பணியினை நிறைவு செய்தது.
*நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று குழு ஆய்வு செய்ததுடன், நேரடி உரையாடல் மற்றும் சந்திப்பு நிகழ்சிகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
*NC JCM Staff Side, Confederation, Major Unions and Associations மட்டுமல்லாது அனைத்து ஊழியர்களின் கருத்தை கேட்டது பாராட்டுதலுக்குரியது.
*ஊதியக்குழு தனக்கென முறையாக இணையத்தளம் தொடங்கி அதில் தனது நடவடிக்கைகளை தவறாமல் பதிவும் செய்தது.
*‘QUESTIONARE’ என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அனைவரிடத்திலிருந்தும் ONLINE மூலமாகவே கருத்து கேட்கப்பட்டது.
*24.6.2014 அன்று 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சார்பாக, புதிய சம்பள விகிதங்கள் அடங்கிய ‘MENORANDUM’-தை NC JCM STAFF SIDE 7வது ஊதிய குழுவிடம் வழங்கியது.
*25.6.2015 அன்று 7வது ஊதிய குழு தனது வலைதளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் நிறைவு பெறுவதுடன், குறித்த காலத்தில் அரசிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்திருந்தது.
*கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கை, பல்வேறு காரணங்களால் 27.8.2015 அன்று 4 மாதங்கள் நீட்டிப்பு செய்ய காபினெட் ஒப்புதல் வழங்கியது.
*டிசம்பர் மாதம் தாக்கலாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட அறிக்கை முன்கூட்டியே வழங்கப்படுவதற்கான காரணங்கள் பீகார் தேர்தல், OROP போராட்டம் என கூறப்படுகின்றன.
*முதலில் Nov 20 அல்லது 23 அன்று அறிக்கை தக்கலாகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று PTI செய்தி நிறுவனம் Nov 19 என உறுதிபட தெரிவித்தது.
*பல்வேறு செய்தி நிறுவனங்கள் 15 அல்லது 20 சதவீத உயர்வு இருக்கும் என குறிப்பிடுகிறது. இந்த உயர்வு எந்த அடிப்படையில் என கணக்கிடப்பட்டது என விளக்கப்படவில்லை.
*ஊழியர்களின் எதிர்ப்பார்ப்பு சம்பள உயர்வு மட்டும் அல்ல. அதை தவிர்த்து பல்வேறு அம்சங்கள் உள்ளன.
*பதவி உயர்வு, DA MERGER, INCREMENT உயர்வு, GRADE PAY, HRA, BONUS, LTC இவை அனைத்துக்கும் மேலாக 6வது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைய உதவும் பரிந்துரைகள்.
*இன்று பிற்பகல் இவை அனைத்திற்கும் விடை தெரியும். காத்திருப்போம்..!
No comments:
Post a Comment