இந்தநிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக (புயல் சின்னம்) மாறியது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறுகிறது. அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 1250 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பருவ மழை மேலும் தீவிரம் அடையும். வருகிற 16–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஓருசில இடங்களிலும் கனமழை பெய்யும். சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும்.
வருகிற 16–ந்தேதி காலை 8.30 மணி முதல் 18–ந்தேதி காலை 8.30 வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக பலத்த மழை பெய்யும். மழை பொழிவு அதிகம் இருக்கும்.
25 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல் 16, 17, 18–ந் தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் காற்று 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலமாக வீசக்கூடும் என்பதால் மீன வர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை தொடரும் வாய்ப்பு இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அடுத்து வரும் நாட்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீட்பு குழுவினர், வருவாய்த்துறையினர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறும் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற தயாராக இருக்குமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உஷார்படுத்தியுள்ளனர்.
மீட்பு பணிகளை மேற் கொள்ளவும், மேற்பார்வையிடவும் தனித்தனி குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் தெற்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதால் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்கும் இதேநிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment