ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதற்கு தடைவிதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆலோசித்து வருவதாக, மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “மானிய விலையிலான சிலிண்டர் இணைப்புகளை சட்ட விரோதமான முறையில் ஏராளமானோர் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கை மூலம் தவறான வழியில் உபயோகமாகிக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு துறை மந்திரி தர்மேந்திர பிரதான் என்னிடம் தெரிவித்தார்.” என்றார்.
மேலும், “10 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதற்கு தடைவிதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களுக்கு எதற்கு மானியம்?. மந்திரிகளுக்கு எதற்கு மானியம்?.
இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது மானியத்தை திருப்பி அளித்துள்ளனர். அந்த மானியம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும்.” என்று கூறினார்.
No comments:
Post a Comment