நான்கு மாதங்களாக, காலதாமதமாக சம்பளம் வழங்குவதை கண்டித்து, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர், திருச்செங்கோடு ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்செங்கோடு ஏ.இ.இ.ஓ.,
அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 86 துவக்கப்பள்ளிகளை சேர்ந்த, 360 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் இறுதியில், சம்பளம் வழங்காமல், பத்து நாட்கள் கழித்து, சம்பளம் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த பிரச்னை, நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. அதேபோல், அகவிலைப்படி உள்ளிட்ட பணப்பயன்கள், ஒப்புவிப்பு விடுமுறைக்கான பணப்பயன் ஆகியவற்றையும், கடந்த நான்கு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.அதனால், ஆவேசமடைந்த ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர், திருச்செங்கோடு ஏ.இ.இ.ஓ., அலுலகத்தை, நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார்.அப்போது, ஒவ்வொரு மாதமும், மாத இறுதியில் சம்பளம் வழங்க வேண்டும்; அகவிலைப்படி உள்ளிட்ட பணப்பயன்களை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில், கூட்டமைப்பை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்

No comments:
Post a Comment