இந்திய குடிமக்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியே கடைசி நாளாகும். கடைசி நாட்களில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கால அவகாசத்தை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு வசதியாகவே, கடைசி தேதியை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டித்துள்ளோம். இந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை 92 லட்சம் பேர் ஆன்லைனிலேயே தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும் என்று நிதித் துறை அறிவித்துள்ளது.
இதனால், இறுதி நாளான இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment