மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு 22.07.2013 தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணைகளில் மிகவும் எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300-34800+4200 தர ஊதியம் வழங்கப்படவில்லை. மறுபடியும் இடைநிலை ஆசிரியர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைந்திட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளது. 25.09.2013 முதல் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் பெரும் எண்ணக்கையில் கலந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் போராட்டம் கடுமையாக இல்லாவிட்டால், இத்தகைய புறக்கணிப்புகள் தொடரத்தான் செய்யும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்......
ஆகவே ஆசிரியப் பேரினமே! ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
கோரிக்கைகள்:
1. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றுதல்
2. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை அடியோடு இரத்து செய்தல்
3. ஆசிரியர் தகுதித் தேர்வினை இரத்து செய்தல்
4. அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் வரலாறு மற்றும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்தல்
5. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல்
உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25 முதல் மாநிலத் தலைநகர் சென்னையில் மாபெரும் மறியல் அறப்போர் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம்.
இன்றிலிருந்தே தயாராவோம்!
சிறைச்சாலைகளை நிரப்பிடுவோம்!
அடிப்படை வாழ்வாதார உரிமைகளை வென்றெடுப்போம்!
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
7 comments:
ippothu poradi peravillai endral adutha oothiya kuluvaal periya verupaadu kaanpom
What about sec.grade trs we will stay lazy.we did'nt get our rights...including salary...all association joint than we will be war
Apavum 7 korikkaigal ah?
Orey korikkai ya vachu poradara sangam ethvathu iruntha solungapa? 7 a neeti 4 korikaiku mandaiya aatura sangam lam vendam pa!
Sinthiyungal!
sangagal thannodda matra sadichukada iruku. unmaya poraduradu ila, thalaivargal sari ila. asiriyar samudayam thanuku benefit pakudu thanna pola matta asiriyargala pakrade ila adukuda inda adi
All association will struggle together . Please state leaders form unity. Only one request that is central pay. No need others. Now we get equal to tractor driver and typist pay.
at least 750 also be given from 01.01.2006
indraya manavarkalai nalaya vinganikalagavum,arasiyal thalaivarkalagavum,nattupatru mikka citizen agavum uruvakkum asiriyarkal than emattrapadukirom.avarkal nalam kakkapattal than nalaya manavar samuthayam malarum.anal asiriyarkale inru othukkapadukirarkal,
Post a Comment