வங்க மொழியினில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்திய தேசிய கீதம்...
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
இதன் நேரடி தமிழாக்கம்...
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
ஆனால்... இதை அப்படியே உபயோகித்தால் தேசிய கீதத்தின் ராகம் வரவில்லை என்பதால் சொல்லாடல்களை சுருக்கி... தேசிய கீதத்தின் உண்மையான பொருள் படும்படி அமைத்து...
மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...
உனக்கே என்றும் வெற்றி...
தமிழில் தேசிய கீதம்... இது தேசிய இந்திய தேசிய கீதமான (வங்க மொழி - ஜன கண மன) பாடலுக்கு என்றுமே ஈடாகாது... மற்றும் மாற்றும் கிடையாது...
மாறாக தேசிய கீதம் பொருளுணர்ந்து பாட இது ஒரு வழியாக அமையும்.
அதை பொருள் உணர்ந்து பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நான் எண்ணி இருந்ததை மனதில் கொண்டே தேசிய கீத பாடலின் தமிழாக்கம் தேசிய கீத பாடலின் ராகத்தில் எழுதப்பட்டது.
மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக ஒன்றை பதிந்து கொள்ள விழைகிறேன்.
தமிழில் தேசிய கீதம்... இது தேசிய இந்திய தேசிய கீதமான (வங்க மொழி - ஜன கண மன ) பாடலுக்கு என்றுமே ஈடாகாது... மற்றும் மாற்றம் கிடையாது...
மாறாக தேசிய கீதம் பொருளுணர்ந்து பாட இது ஒரு வழியாக அமையும் என்று நம்புகிறேன்.
ஆக்கம் : திரு.ஜெகன்னாதன், ஆசிரியர்
ஆக்கம் : திரு.ஜெகன்னாதன், ஆசிரியர்
3 comments:
மிக அருமை
super sir. Meaning theriyama padi enna use
Great. your effort to know clear meaning of National Anthem in tamil helps more pupil under stand .
Post a Comment