Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 30, 2013

    நீச்சல் உடை கொண்டு வராததற்காக மாணவிகளுக்கு பிரம்படி

    கோவையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில், நீச்சல் உடை கொண்டு வராததற்காக, பத்தாம் வகுப்பு மாணவியரை பள்ளி தாளாளரே நேரடியாக அடித்து, ஆபாசமாகப் பேசிய விவகாரம், வெளியில் வந்துள்ளது.

    கோவை நகரில், மாநகராட்சிப்பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியில், பிரபல தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சி.பி.எஸ்.இ., கல்வி முறைப்படி, பாடம் கற்பிக்கும் இந்தப் பள்ளியில்தான் கோவையிலுள்ள பெரும்பாலான வி.ஐ.பி.,க்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி வளாகத்திலுள்ள நீச்சல் குளத்திலேயே வாரமிரு நாட்கள் நீச்சல் கற்றுத்தரப்படுகிறது. இதற்கான நீச்சல் உடையை, இதற்கான பயிற்சி வகுப்பு இருக்கும் நாட்களில் மாணவ, மாணவியர் கொண்டு வர வேண்டியது அவசியம்.

    பத்தாம் வகுப்பு மாணவியருக்கான நீச்சல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்துள்ளது. உடை மாற்றுவதற்காக அவர்கள் வந்தபோது, 10க்கும் மேற்பட்ட மாணவியர், நீச்சல் உடை எடுத்து வராதது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பள்ளி தாளாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அங்கு வந்த பெண் தாளாளர், நீச்சல் குளத்தில் குப்பைகளை அகற்றுவதற்காக வைத்திருந்த குச்சியில், நீச்சல் உடை கொண்டு வராத மாணவியரை வரிசையாக நிற்க வைத்து, அவர்களின் கால்களில் அடித்துள்ளார்.

    அது மட்டுமின்றி, மாணவிகள் மனது புண்படும்படி, ஆண் நீச்சல்  பயிற்சியாளருக்கு முன்நிலையில், பெண் தாளாளர் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த வார்த்தைகளால் மாணவியர் அனைவரும் கூனிக்குறுகியுள்ளனர்.

    இந்த தகவல், சிறிது நேரத்தில் பள்ளி முழுவதும் பரவியது. மாலையில் பள்ளி முடிந்தபின், மாணவ, மாணவியரின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.

    சி.பி.எஸ்.இ., பள்ளி என்பதால், இதுபற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமென்று கருதி, போலீசிலோ, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளிடமோ புகார் செய்வதற்கு பெற்றோர் அஞ்சுகின்றனர். இந்த விஷயத்தை, எவ்வாறு அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வது என்பது பற்றி, பெற்றோர் மத்தியில் ரகசிய ஆலோசனையும் நடந்து வருகிறது.

    1 comment:

    Anonymous said...

    Dress code for particular course recommended by school is good. But at the same time, certain items must be taught by the concerned gender teacher. Publishing such a thing in web is very awkward. Hope u will understand.