பிகாரில் மதிய உணவு திட்டப் பணியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராடிவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடன் மாநில அரசு சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடத்தியது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தால் மாநிலத்தில் சுமார் 5 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவு பரிமாறப்படவில்லை.இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மாநில அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அரசு தரப்பில் தொடக்க கல்வி இயக்குநர் ஏ.கே.செüத்ரி பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.அரசுடன் நடந்த பேச்சு வார்த்தை நல்ல முடிவை எட்டும் விதமாக இருந்தது என்று தொடக்க கல்வி ஆசியர் சங்கத் தலைவர் பிரஜநாதன் சர்மா கூறினார். இது தொடர்பாக திங்கள்கிழமை விரிவாக கலந்தாலோசித்து எங்களது முடிவை அரசுக்குத் தெரிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment