சென்னையில் செப்.25ம் தேதி 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் மாநில மறியல் போராட்டத்தில் நெல்லையிலிருந்து ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது என நெல்லையில் நடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு துவக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் தர்மராஜ் பிராங்ளின் வரவேற்றார். முன்னாள் மாவட்ட பொருளாளர் சிவஞானம், மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம் மூசா, மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சென்னையில் செப்.25ம் தேதி 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் மாநில அளவிலான மறியல் போராட்டத்தில் நெல்லையில் இருந்து ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் அரசாணை 207 ன் படி ஆசிரியர்களுக்குரிய பணப்பலன்களை வழங்க வேண்டும். மாவட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.டி.டி.ஏ., மற்றும் ஆர்.சி., பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மாத இறுதி வேலை நாளில் ஊதியம் வழங்க நடவடிக்கை வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, ஒன்றிய, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment