Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 22, 2013

    2ம்கட்ட கவுன்சிலிங்கும் கண்துடைப்பே: முதுகலை ஆசிரியர்கள் புலம்பல் - நாளிதழ் செய்தி

    "மதுரையில் நடந்த 2ம் கட்ட கவுன்சிலிங்கும் முறையாக நடக்காமல், கண் துடைப்பாகவே நடந்தது" என முதுகலை ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு கடந்த மேயில் முதற்கட்ட இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. நேற்று தரம் உயர்த்தப்பட்ட அம்மாபட்டி, மங்களாம்பட்டி, பொட்டப்பட்டி பள்ளிகளுக்காக, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. இதில் 27 பணியிடங்களுக்கு 11 இடங்களை மறைத்துவிட்டனர். மீதி 16 இடங்களையே காட்டினர். இந்த இடங்களில் 5 இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்தனர்.

    முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதாவது: இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை நாங்கள்தான் வலியுறுத்தி பெற்றோம். ஆனால் அது முறையாக நடக்கவில்லை. இதனை ஆன்லைனில் நடக்காமல், வாய்மொழியாகவே நடத்தினர்.

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஜூலை 19 கவுன்சிலிங் நடந்தது. அதிலும் சிலஇடங்களை மறைத்தனர். அந்த இடங்களுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் இடத்தையும் மறைத்தனர். அதேபோல 5 முதுகலை ஆசிரியர்கள் இன்று இடமாறுதல் பெற்றனர். அவர்களின் இடத்தையும் காண்பிக்காமல் பெரும் முறைகேடாக நடந்துள்ளது. எனவே இக்கவுன்சிலிங்கை மீண்டும், முறையாக நடத்த வேண்டும், என்றார்.

    No comments: