தீய விளைவுகளை ஏற்படுத்தும் ரசாயனங்கள் மற்றும் அவை உயிரினங்களின் உடம்பில் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை கற்பிக்கும் படிப்பு, ‘டாக்சிகாலஜி’!
நச்சு பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் மற்றும் நச்சுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ‘டாக்சிகாலஜி’ கொண்டுள்ளது. இவைமட்டுமின்றி, வேதியியல், உயிரியல் மற்றும் மருந்தியல் ஆகிய பாடங்களுடன் இணை பிரிவாகவும் இது உள்ளது.
இத்துறையில், அக்குவாட்டிக் டாக்சிகாலஜி, கெமிக்கல் டாக்சிகாலஜி, மெடிக்கல் டாக்சிகாலஜி, என்விரான்மெண்ட் டாக்சிகாலஜி, கிளினிக்கல் டாக்சிகாலஜி, இகோ - டாக்சிகாலஜி, பாரன்சிக் டாக்சிகாலஜி, ஆக்குபேஷன் டாக்சிகாலஜி மற்றும் டாக்சிக்யோமிக்ஸ் ஆகிய பிரிவுகள் உள்ளடங்கும். பல உட்பிரிவுகளை கொண்டுள்ள மகத்தான துறையாக, ‘டாக்சிகாலஜி’ இருப்பதால் மாணவர்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற பாடப்பிரிவை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்வு செய்து படிக்கலாம்.
முக்கிய படிப்புகள்
பி.எஸ்சி., டாக்சிகாலஜி அல்லது பயலோஜிகல் சயின்ஸ்
எம்.எஸ்சி., டாக்சிகாலஜி அல்லது என்விரான்மெண்ட் டாக்சிகாலஜி
போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் இகோ டாக்சிகாலஜி
பி.எச்டி., டாக்சிகாலஜி அல்லது என்விரான்மெண்ட் டாக்சிகாலஜி
குறுகிய கால படிப்பு: டிப்ளமோ இன் அக்குவாட்டிக் இகோலஜி, எக்ஸ்னோபயோடிக்ஸ்
தகுதிகள்: இளநிலை படிப்பிற்கு, பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு, தாவரவியல், வேதியியல், விலங்கியல், உயிர் வேதியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், மருந்தகம், உயிர் வேதியியல், உயிரி தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், சுற்றுச்சூழல் உயிரியல் போன்ற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், நோயியல், உடலியல், நோய் எதிர்ப்பியல், மற்றும் மரபியல் உள்ளிட்ட துறைகளில் பயின்றவர்களும் ‘டாக்சிகாலஜிஸ்ட்’ ஆக முடியும்.
முக்கிய நுழைவுத்தேர்வுகள்: அகில இந்திய முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்-பி.ஜி.,/ ஏ.ஐ.பி.எம்.டி.,), ஒருங்கிணைந்த பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு, டெல்லி பல்கலைக்கழக மருத்துவ நுழைவுத்தேர்வு (டி.யு.எம்.இ.டி.,), தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் கல்வி நிறுவன நுழைவுத் தேர்வு, மருந்தக தேசிய கல்வி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நுழைவுத் தேர்வு, பஞ்சாப் மருத்துவ நுழைவுத்தேர்வு, ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் - முதுநிலை நுழைவுத்தேர்வு.
முக்கிய கல்வி நிறுவனங்கள்
இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி அண்ட் டாக்சிகாலஜி, காஞ்சிபுரம்
சென்டரல் டிரக் ரீசர்ச் இன்ஸ்டிடியூட், லக்னோ
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டாக்சிகாலஜி ரீசர்ச், லக்னோ
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாகியூடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச், பஞ்சாப்
ஸ்கூல் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஐஐடி., காராக்பூர்
இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு
எஸ்.சி.எம்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் பயோசயின்ஸ் அண்ட் பயோடெக்னாலஜி ரீசர்ச் அண்ட் டெவலெப்மெண்ட், கேளரா
எஸ்.சி.எம்.எஸ்.,டெக்னாலஜி அண்ட் மேனஜ்மென்ட், கொச்சி
பவான்ஸ் நியூ சயின்ஸ் கல்லூரி, ஹைதராபாத்
இன்ஸ்டிடியூட் ஆப் ரீபுரோடக்டீவ் மெடிசன், கொல்கத்தா
கஸ்துரிபா மெடிக்கல் கல்லூரி, மணிப்பால்
No comments:
Post a Comment