பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் செயல்முறை விளக்க கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, பள்ளி தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ், செயல் உறுப்பினர் சித்ரா கோவிந்தராஜ் மற்றும் பாலக்கோடு லயன்ஸ் சங்க தலைவர் முத்து, கிருஷ்ணா சில்க்ஸ் தருமன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பின், கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து செயல் விளக்கங்களையும் பார்வையிட்டனர். பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,200 மாணவர்கள், 60 ஆசிரியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்த அறிவியல் செயல் முறை கண்காட்சி மூலம், அரசு பள்ளி மாணவ, மாணவியர் புதிய விஷயங்களை தெரிந்து கொண்டனர்.
No comments:
Post a Comment