குளித்தலை, அரசு கல்லுாரியில், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில், தொடர் உள்ளிருப்பு போராட்டம், நேற்று இரண்டாவது நாளாக நடந்தது.
சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். செயலாளர் அன்பரசு, பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், டோமினிக் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அழகப்பா பல்கலை கழகத்தின் சார்பில், அரசு கல்லுாரியில் பேராசிரியர்களை பணி மாறுதலில் பணியமர்த்தும் ஆணையை திரும்பபெற வலியுறுத்தி, இரண்டாம் நாள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
35க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்லுாரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment