அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக, உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கல்வித்திட்ட பயிற்சி முகாம், திருச்செங்கோட்டில் நடந்தது.
திருச்செங்கோடு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) செந்தமிழ்செல்வி துவங்கி வைத்தார். திருச்செங்கோடு, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஒன்றியங்களை சேர்ந்த, 48 உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான தகவமைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், மாற்றுத்திறன் மாணவர்களின் தன்மைக்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைத்து, அவர்களில் கற்றல் முன்னேற்றத்தை மேம்படுத்த தேவையான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
கருத்தாளர்களாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment