திருப்பூர் காங்கயம் ரோடு, பத்மினி கார்டனில், புத்தக திருவிழா, வரும், 12ல் நிறைவடைகிறது. புத்தகங்கள் என்பது, வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் அல்ல; வாழ்க்கையை கற்றுத்தரும் அற்புத களஞ்சியங்கள். ஒருவருக்கு எப்போதுமே சிறந்த நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக ஒரு புத்தகம் விளங்குகிறது.
பக்கங்களை புரட்ட, புரட்ட, அது சிலரது வாழ்க்கை புரட்டி போடுகிறது; தடம் புரண்ட பலரது வாழ்க்கையை, நல் வழிப்படுத்தி இருக்கிறது.ஒரு வீட்டுக்கு படுக்கையறை, சமையலறை, பூஜை அறை, வரவேற்பறை, கழிப்பறை எவ்வாறு முக்கியமோ, அதேபோல் முக்கியமானது, நூலக அறை; மனிதர்கள் தினமும் ஒரு மணிநேரமாவது புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
சினிமா, ‘டிவி’, மொபைல் போனில் பலமணி நேரத்தை தொலைத்து கொண்டிருக்கும் நாம், புத்தகங்களில் முகத்தை புதைத்தால், வாழ்க்கை உயிர்த்தெழும் என்பதே உண்மை.
திருப்பூர் காங்கயம் ரோடு, பத்மினி கார்டன் வளாகத்தில், பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், 14வது புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. வரும், 12ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், தங் களது ஆயிரக்கக்கான புத்தகங்களை, 151 அரங்குகளில் விற்பனைக்கு வைத்திருக்கின்றன.
அரசியல், விவசாயம், பொருளாதாரம், பொது அறிவு, மருத்துவம், கம்ப்யூட்டர், ஓவியம், ஆன்மிகம், சமையல், ஜோதிடம், சிறுவர் இலக்கியம், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், ஆங்கில நாவல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, ராமாயம், மகாபாரதம், அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், கதை, கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை என, பல்வேறு தலைப்புகளில், பல ஆயி ரக்கக்கான புத்த கங்கள் குவிந்திருக்கின்றன.
கல்கி, ஜெயகாந்தன், சாண்டில்யன், கண்தாசன், பாலகுமாரன், எஸ். ராமகிருஷ்ன், வைரமுத்து, சுஜாதா போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள்; சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்கள், அப்துல் கலாமின் நூல்கள் என, அள்ள அள்ள குறையாத அறிவு அமுதமாய், புத்தக கண்காட்சி ஒரு பொக்கிஷமாக காட்சியளிக்கிறது.
கண்காட்சி வளாகத்தில் தினமும் காலை,11:00 மணிக்கு, சிந்தனை அமர்வு; மாலை, 6:00 மணிக்கு, இலக்கிய சொற்பொழிவு, கலைநிகழ்வுகள் நடக்கிறது. இதில் எழுத்தாளர்கள், இலக்கிய பேச்சாளர்கள், கல்வியாளர்கள், டாக்டர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.
மாவ, மாவியர் வானியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ள, கோள ரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகன பார்க்கிங், கேண்டீன் வசதிகளும் உள்ளன.ஆண்டுக்கு ஒருமுறை திருப்பூரில் நடத்தப்படும் புத்தக திருவிழா, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டிய ஒரு அறிவு திருவிழா. புத்தகங்கள் வாங்குவதற்கான செலவு, ப இழப்பு அல்ல; வாழ்க்கைக்கான மூல தனம்.
சிறியவர் முதல், பெரியவர் வரை அனைவரும் புத்தக கண்காட்சியில் பங்கேற்று, அங்குள்ள புத்தக அரங்குகளுக்கு சென்று, புத்தகங்களை அள்ளி செல்லலாம். அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீதம் விலை தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.
இன்று...
புத்தக கண்காட்சியில் இன்று, காலை, 11:00 மணிக்கு எழுத்தாளர்களோடு கலந்துரையாடல் நடக்கிறது. மாலையில், திருப்பூர் தமிழ் சங்கம் சார்பில், எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகிறது. தஞ்சை தமிழ் பல்கலை துøவேந்தர் பாஸ்கரன், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வண்தாசன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
No comments:
Post a Comment