கோவை நவ இந்தியா, எஸ்.என்.ஆர்., சன்ஸ் கல்லுாரியில், ’டெக்னோ கிளான்ஸ் - 17’ என்ற தலைப்பில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை சோதிக்கும் வகையில், பல்வேறு போட்டிகள் நடந்தன.
கணினி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், வளர்ச்சியை விளக்கும் நோக்கில், ’டெக்னோ கிளான்ஸ் - 17’, நிகழ்ச்சி நடந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி, கருத்துகள் குறித்த, கட்டுரை சமர்பித்தல், உற்பத்தி பொருட்களை மார்க்கெட்டிங் செய்தல், இணைய வடிவமைப்பு உள்ளிட்ட ஆறு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன.
இதில், 36 கல்லுாரிகளில் இருந்து, 700 மாணவர்கள் பங்கேற்றனர். ’ஸ்கைபிரிட்ஜ் இன்போசிஸ்’ நிறுவன முதன்மை செயல் அதிகாரி சக்தி கோபால்சுவாமி தலைமை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் கருணாகரன் பேசுகையில், ”தொழில்நுட்ப வளர்ச்சியால், அனைத்து துறைகளும், அதிவேகமாக முன்னேறி வருகின்றன.
கணினி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை விளக்கவும், மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், போட்டிகள் நடந்தன. இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி தட்டி சென்றது,” என்றார்.
No comments:
Post a Comment