‘விரைவில் பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில், தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் மாணவர்களுக்கு எதிர்மறை எண்ங்களை தடுக்கும் வகையில் ‘கவுன்சிலிங்’ அளிக்க வேண்டும்,’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று, தோல்வியை சந்தித்கும் மாவர்களில், மிகச்சிலர் தற்கொலை முடிவை எடுத்து விடுகின்றனர். இதனை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்ளுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.
குழந்தை பாதுகாப்பு அவலர், மனநல ஆலோசகர், சமூகப்பணியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மாவர்களை தோல்வி பயம், விபரீத முடிவுகளில் இருந்து காக்க ஆலோசனை வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில், 11 ஆயிரத்து, 261 மாவர்கள்; 13 ஆயிரத்து, 996 மாவிகள் என, 25 ஆயிரத்து, 258 பேர் தேர்வெழுதுகின்றனர். கடந்த வாரம், 9ம் தேதி செய்முறை தேர்வு துவங்கிய நிலையில், அடுத்த மாதம், 2ம் தேதி பொதுத்தேர்வு நடக்கிறது.
பல காலசூழ்நிலை, மனோநிலைக்கு இடையே மாணவர்கள் வசிப்பதுடன், தேர்வை எதிர்கொள்ள தயாராவதால், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உடனடியாக, கவுன்சிலிங் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் தற்கொலை எண்த்தை தடுத்து, தன்னம்பிக்கை ஏற்படுத்த, நீதி போதனை ஆசிரியர் நியமிக்கப்படும், என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான பணிகளை வேகப்படுத்ததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு, தனி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
இதனால், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நீதி போதனை வகுப்புகளும் கைவிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment