’அனைத்து கல்லுாரிகளிலும், இளைஞர் ரெட்கிராஸ் பிரிவை துவக்கி, மாணவ, மாணவியரை சமூக நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்’ என, அறிவறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து கல்லுாரிகளிலும், ’யூத் ரெட்கிராஸ்’ அமைப்பு துவக்கி, மாணவ, மாணவியர் அதில் இணைய வேண்டும்’ என, கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில், யூத் ரெட்கிராஸ் துவக்கப்பட்டு, ரத்த தான முகாம் நடந்தது; 20 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.
நீலகிரி ரெட்கிராஸ் செயலர் மோரிஸ் சாந்தாகுரூஸ் கூறுகையில்,“அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் ’யூத் ரெட் கிராஸ்’ பிரிவு துவக்கப்பட உள்ளது. மாவட்டத்தில், கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., என, 21 உயர் கல்வி நிலையங்கள் உள்ளன.
ரெட் கிராஸ் பிரிவில் உள்ள மாணவ, மாணவியர், ஆண்டுக்கொரு முறையாவது ரத்த தானம் செய்ய வேண்டும். பேரிடர் சமயங்களில், முதலுதவி மற்றும் மீட்புப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவியர், மாநில, தேசிய அளவில் நடத்தப்படும் முகாம்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்; அதன் மூலம், அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்,” என்றார்.
முகாமை, நீலகிரி கலெக்டர் சங்கர் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார். கல்லுாரியில் யூத் ரெட்கிராஸ் பொறுப்பாளராக டாக்டர் ராஜா, இணைப் பொறுப்பாளராக சன்டில்னா, மாணவத் தலைவராக ரசீஸ் அகமது, துணைத் தலைவராக ஸ்ரேயன் சாகா, செயலராக ஆஷிஷ் குமார் சாகா, துணை செயலராக புரு கவுஷல், பொருளாளராக ஜெயராம் பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்கள், ரெட்கிராஸ் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
கல்லுரியின் துணை முதல்வர் அப்சல் அசாம், நிர்வாக அலுவலர் பசவண்ணா, நீலகிரி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் சரவண சந்தர் உட்பட கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment