கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வெளிநாட்டினர் உறுப்பினராக உள்ள, ரவுண்ட் டேபிள் அமைப்பு உதவி வழங்கியது. கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கோவை ரவுண்ட் டேபிள் எண், 9ன் சார்பில், இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. நான்கு வகுப்பறை களுக்கு வர்ணம் தீட்டப்பட்டது. இவை மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது.
ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் ராம் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இவ்வமைப்பை சேர்ந்த பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து நாட்டினர், 40 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, இனிப்பு மற்றும் புத்தகங்களை வழங்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் நேரு பேசுகையில், இப்பள்ளி தரமுயர்த்தப்பட்டது முதல், மூன்று ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது,என்றார்.
ஊராட்சி தலைவர் சாந்தி நடராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி ஆகியோர் பேசினர். வெளிநாட்டினருக்கு, மாணவ, மாணவியர் திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். மாணவ, மாணவியர் பலர், ஆர்வத்துடன் வெளிநாட்டினருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment