தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக, அவசர மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல், 2004-2006ம் ஆண்டு பணியில் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணிவரன் முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்குதல், மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் ஒன்றுக்கு உழைப்பூதியமாக, 20 ரூபாய் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநிலத்தலைவர் மணிவாசகன் பேசினார்.
இங்கிலாந்து உலக செம்மொழி தமிழ் பல்கைலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றமைக்காக, இவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அப்துல்அஜீஸ், மாநிலத்துணைத்தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment