தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கானபணிநிரவல் கலந்தாய்வில் விதிமீறல் நடந்தால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என இயக்குனர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்வித்துறையில் ஆக.,3ல் துவங்கிய ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஆக.,31 வரை நடக்கிறது. இதுவரை, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் நடுநிலை, உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வுகள் நடந்தன.ஆக.,13, 14ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடக்கிறது. 'இதில் விதிமீறல் நடக்கலாம்' என ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பள்ளியில் 2015 செப்.,௧ அன்று மாணவர் எண்ணிக்கை அல்லது 2016 ஆக.,௧ அன்று உள்ள மாணவர் எண்ணிக்கையில் எது அதிகமோ, அதன்படி ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்; இதில் 'சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கிடுவர். பணியில் இளைய ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என்பது விதி. இவ்விதி மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறும் ஆசிரியர்கள் (டிப்ளாயிமென்ட் சர்பிளஸ்) கலந்தாய்விலும் விதிகளை தளர்த்தி முடிவு எடுக்கப்பட்டதாக, ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சைகள் எழும். 'விதிமீறியது தெரியவந்தால் கல்வி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
மதுரையில் மந்தம்: இயக்குனர் உத்தரவுப்படி தேனி, விருதுநகர், நெல்லை உட்பட மாவட்டங்களில் ஆக.,13ல் பணிநிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்கள் பட்டியல் விபரம், ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'மதுரை உட்பட சில மாவட்டங்களில் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை' என தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment