Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 6, 2016

    தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.

    தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொதுமாறுதல்கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல்கட்டாயமாக செய்ய உள்ளார்கள். அதில்  

    1)மாவட்டம் விட்டுமாவட்டம் பணி நிரவல் கிடையாது. 

     2)பணி நிரவலில் பணி நிரவல் செய்யப்படவேண்டியஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம்இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள். 

    3)பணி நிரவல் செய்யப்பட வேண்டியஆசிரியர்களுக்குஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம்விட்டுஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.   


    4)ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்யும் நிலைஏற்பட்டால் அந்தஒன்றியத்தில் மிகவும் இளையவர்எவரோ(block level service junior) அவரையேபணி நிரவலில்அதே மாவட்டத்தில் பிறஒன்றியத்திற்கு நிரவல் செய்யவேண்டும்.  

    5)ஒன்றியத்திற்குள் பணி நிரவல் எனும்போதுஎந்தபள்ளியில் பணி நிரவல் ஏற்படுகிறதோஅந்த பள்ளியில்பணி ஏற்றதில் யார்இளையவரோ ( station junior ) அவரே பணிநிரவல் செய்யப்படவேண்டும்.பணி நிரவல்செய்யப்படவேண்டியவர் மாற்று திறனாளி எனில்அவரைவிட்டுவிட்டு அந்த பள்ளியில் அவருக்குமுன்பணியில்சேர்ந்தவரை பணி நிரவல் செய்யவேண்டும்.  

    6)பணி நிரவல் 30.09.2015 அன்றுஉள்ள மாணவர்கள் பதிவின்அடிப்படையில் செய்யப்படஉள்ளது.இதில் சிறு விதிதளர்வும்உள்ளது. உதாரணமாக ஒருபள்ளியில் 3 ஆசிரியர்கள்பணியில் இருந்து 30.09.2015ல்மாணவர்கள் பதிவு 55 எனில்ஒரு ஆசிரியர்பணியிடத்தினை நிரவல்செய்வார்கள்.அதேபள்ளியில் 01.08.2016ல் 61 மாணவர்கள்பதிவுஉள்ளது எனில் விதி தளர்வுதந்து பணியிடத்தினைநிரவல் செய்யக்கூடாது.அதுபோலவே ஒரு பள்ளியில் 3ஆசிரியர்கள்பணியில் இருந்து 30.09.2015ல் 61 மாணவர்கள்பதிவுஇருந்து 01.08.2016ல் 55 மாணவர்கள் பதிவுஉள்ளதுஎன்றாலும் பணி நிரவல் செய்யக்கூடாது .

    No comments: