கல்வித் துறை குளறுபடியால் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (டிஎன்ஜிடிஎப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 10 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் பணி புரிந்திருந்திருந்தால் சிறப்பு நிலை, 2 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் தகுதி காண் சான்று வழங்கப்பட்டு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
இதற்கு, ஆசிரியர்களுடைய கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிக்கை இருந்தால் மட்டுமே உத்தரவு வழங்க முடியுமென கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தேர்வு நிலை, சிறப்பு நிலை பெறுவதற்கு இது தேவையில்லையென பள்ளிக் கல்வி இயக்குநரகம் தகவல் அறியும் உரிமை அறிக்கையில் கூறியுள்ளது. தகுதி காண் சான்றுக்கு ஆறு மாதங்களுக்குள் ஆணை வழங்கப்படவில்லை என்றால் பருவம் முடிவு பெற்றதாகக் கருதி ஊதிய உயர்வு பெறலாமென விதிமுறை உள்ளது.
பல ஆண்டுகளாக கல்வித் துறை அனுப்பும் சான்றிதழ்களுக்கு அரசுத் தேர்வுத் துறை உண்மைத் தன்மை அறிக்கை வழங்குவதில்லை. எனவே பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளபடி, ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க உத்தரவிட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment