'குரூப் - 4 பதவிகளில், 5,451 காலியிடங்களுக்கு, நவ., 6ல், எழுத்துத்தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவை மற்றும் நில ஆவண துறை கள ஆய்வாளர், வரைவாளர், மூன்றாம் நிலை சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் என, மொத்தம், 5,451 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
தகுதியானவர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், செப்., 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை, செப்., 11ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. எழுத்துத்தேர்வு, நவ.,6ல் நடக்கும்.
No comments:
Post a Comment